கொடையாஞ்சி பங்கு
கொடையாஞ்சி பங்கு வேலூர் மறைமாவட்டத்தில் இருக்கிற பங்குகளில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு. இந்த பங்கு 72 வருட பழமை வாய்ந்தது. இரண்டு முறை பங்காக உருவாக்கப்பட்டது. முதலில் உதயேந்திரம் பங்கோடு இணைந்திருக்கிற போதும்ää இரண்டாவது வாணியம்பாடி பங்கோடு இணைந்திருக்கிற போதும் உயர்த்தப்பட்டு வசதியின்மையின் காரணத்தினால் கிளை பங்காக இரண்டு முறையும் மாற்றப்பட்டது. இரண்டு சபையைச் சார்ந்தவர்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக சலேசிய சபை குருக்கள்ää ஆளுகுளு சபை குருக்கள்.
மீண்டும் புதிய பங்காக 28.05.2008 ல் மூன்றாவது முறையாக உருவாக்கப்பட்டது. புதிய பங்கு குருவாக வந்தவரின் பணிக்காலம் ஒருநாள் மட்டுமே. வசதியின்மையின் காரணமாக புதிய பங்கு குரு பங்கைவிட்டு சென்றுவிட்டார். இரண்டாவது பங்கு குரு அருட்பணி. எட்வர்ட் அவர்கள் பங்குப் பணியாளராக 06.06.2008 பொறுப்பேற்று 2016 ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றி மக்களை ஆன்மீகத்திலும் கல்வியிலும் பொருளாதார வாழ்விலும் சிறப்பாக வழிநடத்திய பெருமை அவரைச் சேரும். புதிய பங்கு தந்தை இல்லமும் புதிய ஆலயமும் இவரது அயரா உழைப்பின் அடையாளங்கள். பழைய ஆலய பகுதியில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு ஏற்ற சமூக சூழல் இல்லாததாலும் பெரும்பாண்மையினரின் அடக்குமுறையாலும் புதிய ஆலயம் தாமஸ் நகர் பகுதியில் உருவாக்க வேண்டிய சூழல் உருவானது. 2016 ஆம் ஆண்டில் அருட்பணி. அமல்ராஜ் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நல்லதொரு பணியாற்றினார். அவரது காலத்தில் ஆலயத்தைச் சுற்றி வேலி அமைத்ததுää ஆலய வளாகப் பாதையில் கற்கள் அமைத்தது அவர் இந்த பங்கில் முன்னெடுத்த முயற்சிகளில் முக்கியமானது. அன்பியங்களை சந்தித்து அன்பியங்களை வலுப்படுத்தியது அவரின் பணிகளின் சிறப்பு வாய்ந்தது. 05.06.2018 ஆம் ஆண்டு அருட்பணி. தொன்போஸ்கோ பங்கு தந்தையாக பொறுப்பேற்று பணியாற்றிக்கொண்டிருக்கிறார். புதிய சகாய மாதா கெபி அமைத்ததுää திட்டமிட்டு பணிகளை செய்தல்ää அன்பியங்களை வலுப்படுத்துவது இவரின் பணிகளின் சிறப்புகள்.