1. இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலை நோக்கி பயணம் செய்வோம்.
Our journey is towards a self reliant nature oriented life.
இரசாயனமில்லா பாரம்பரிய உணவு முறை (Chemical-free food lifestyle)
ரசாயன கலப்பில்லாத இயற்கை முறையில் விளைந்த தானியங்கள் காய்கறிகள் பழங்களை உட்கொள்ளுதல்,
சுவைக்காகவும் உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும் சேர்க்கப்படும் ரசாயனங்கள் கலந்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் மசாலா பொருட்களை கூடுமானவரையில் தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக்கொண்டு நாமே தயாரித்துக் கொள்ளுதல் அது குறித்த விழிப்புணர்வை பகிர்ந்து கொள்ளுதல்
நெகிழி இல்லா வாழ்க்கை முறை (Plastic-Free Lifestyle)
சமையலறையிலும் உணவு சார்ந்த விஷயங்களிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அறவே அகற்றுதல்.
2. இயற்கை விவசாயத்தை முன்னெடுப்போம் .
To promote natural farming
நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளை இயற்கை விவசாயம் மேற்கொள்ள செய்வதற்கான உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேற்கொள்ளுதல்,
இயற்கை முறையில் விளைந்த பொருட்களை குழுவினர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் சந்தைப்படுத்துதல்
நம் உழவரை அறிவோம். ஆதரிப்போம்.
Know & Adopt your farmers and ease their sufferings
விளைபொருள் விற்பனையில் உழவருக்கு உள்ள நடைமுறை சிக்கல்களை எளிதாக்குதல்.
To ease pain points for the farmer in marketing of the products eg: instead of sending small parcels every now and then, the farmer can send a large parcel on a particular day that would be distributed.
நியாயமான வெளிப்படைத் தன்மை உள்ள பரிவர்த்தனை.
Fair and transparent dealing
இணைய தளம், செயலி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் நம் குறிக்கோள்களை முன்னெடுத்தல் மற்றும் பரப்புதல்.
3. இயற்கை சார் சமூக பணி மேற்கொள்ளுதல்
To promote nature oriented social projects
நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறுங்காடுகள் அமைத்தல், ஏரி கண்மாய்களை சீரமைத்தல், ஊர் பொது இடங்களிலும் கண்மாய்களில் மரம் நடும் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பராமரித்தல், பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைத்தல், அது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.