ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெரிதான
கிருபையால் அன்புத் தாயார் திருமதி.மாரியம்மாள்
கோயில்பிள்ளை அம்மாவைக் கொண்டு 1949 ம்
ஆண்டு ஜனவரி மாதம் இம்மானுவேல் ஜெபவீடு
ஆரம்பித்து 3.9.2001 வரை 52 ஆண்டுகள் மகிமையாக
அநேக ஆயிரக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக
நடத்தி வந்தார். பாவத்தினின்று விடுதலையும்
வியாதியினின்று விடுதலையும் பிசாசின்
கட்டுகளிலிருந்து விடுதலையும் கொடுத்து இன்றும்
தேவனுக்கு சாட்சிகளாக வைத்து நடத்தி வருகிறார்.
அல்லேலூயா!
அம்மா விட்டுச்சென்ற தேவ பணியை
தொடர்ந்து நிறைவேற்ற தேவ ஆவியானவர் பெலன்
தந்து, 16 வது ஆண்டில் நடத்தி வருகிறார். அம்மா
தீர்க்கத்தரிசனமாக சொன்ன வார்த்தையின்படி
என்னைக் கொண்டு நடத்தினது வேறு, உன்னைக்
கொண்டு நடத்தினது வேறு என்ற வாக்கை
நிறைவேற்றி T.V.ஊழியம், V.C.D. ஊழியம், வெளியே
ஊழியங்களை செய்யும்படி கிருபை செய்து
நடத்துகிறார், உண்மையும். உத்தமமுமாக இந்த
ஊழியத்தை நிறைவேற்ற தேவபெலன் தந்து
நடத்தும்படி ஜெபித்து வருகிறேன், வரப்போகிற
நாட்களிலும் பின்சந்ததியின் மூலமாக தேவன்
வல்லமையாய் கிரியை, ஆகாய் 2:3 முந்தின
ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் பிந்தின
ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று கர்த்தர்
சொல்கிறார், ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
Sis.பொன்சீலி சாமுவேல்