இதில் பஞ்ச தந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், ராயர் அப்பாஜி கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், ஈஸாப் இயற்றிய நீதிக்கதைகள் மற்றும் சில கதைகள் உள்ளன. இவைகளை பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கும், தாத்தா பாட்டி பேரக் குழந்தைகளுக்கும் கூறி அவர்களது அறிவு, சமயோசித புத்தி, சிந்திக்கும் திறன், பிரச்சினைகளை சமாளிக்கவும், ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் திறன் ஆகியவைகளை வளர்க்கலாம்.
இக்கதைகளைக் கேட்பதால், குழந்தைகள் நூல்களை படிக்க ஆர்வம் உண்டாகும். மேலும், நூல்களை படிப்பதால், கல்வித் திறனும் அதிகமாகும்.
நூல்கள் எளிதாக உள்ளதால், குழந்தைகளையே படிக்கச் சொல்லி கதைகளை விளக்கலாம். இதனால், கைபேசி, டீவி ஆகியவைகளில் நேரம் விரயம் செய்வதைத் தவிர்க்கலாம்.