திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களின் குறை நீக்கும் முயற்சியாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. P.M. சரவணன் அவர்களால் இந்த செயலி அர்பணிக்கப்பட்டுள்ளது.
குறை தீர்த்து சீரான சேவைகளை வழங்குவதற்க்கென்றே இந்த செயலி அர்பணிக்கப்படுகிறது. உங்கள் பகுதியில் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை, தெரு விளக்கு, சாலை பழுது போன்ற பொதுப்பயன்பாட்டு பொருட்கள் பழுதடைந்தாலோ அல்லது ஏதேனும் குறைகள் இருந்தாலோ அதை புகாராக இந்த செயலி மூலமாக எங்களுக்கு அனுப்பும் பட்சத்தில் உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.
உங்கள் புகார்கள் உடனடியாக மேயரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்.
குறிப்பு: இந்த சேவை திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.